கவின் கல்யாணம்; லாஸ்லியா பேட்ட பதிவு - பதிலடி கொடுத்த மனைவியின் முதல் பதிவு!
திருமணத்தன்று லாஸ்லியா செய்த பதிவுக்கு மோனிகா பதிலடி கொடுத்துள்ளார்.
கவின்-மோனிகா
கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதன்பின் இருவரும் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், கவின் மற்றும் மோனிகா திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மோனிகாவும் லாஸ்லியாவும் தோழிகள் என்றும் கூறப்பட்டது.
வைரல் பதிவு
தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் கவின் - மோனிகா திருமணம் நடந்த போது, திருமணத்தன்று லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை’ என்று சூசகமாக பதிவு ஒன்றை செய்திருந்தார்.
இந்த பதிவிற்கு தற்போது மோனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’அதிகாரபூர்வமாக நான் கவினின் மனைவி ஆகிவிட்டேன்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.