Mr. & Mrs. கவின்....இணையதளத்தில் வைரலாகும் திருமண புகைப்படங்கள்
இன்று நடிகர் கவின் மோனிகா டேவிட் இருவரின் திருமண நடைபெற்ற நிலையில், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகர் கவின்

விஜய் டிவி தொடர்களில் நடித்து வந்த கவின், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வரத்துவங்கின. கவின் நாயகனாக நடித்து OTT'யில் வெளியான லிஃப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியான டாடா திரைப்படம் மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடம் வரவேற்பை இந்த படம் பெற்ற நிலையில், தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவின் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சிறப்பாக நடைபெற்ற திருமணம்
இந்த நிலையில், நடிகர் கவினுக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது. அவர் தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட் என்பவரை கரம்பிடித்து உள்ளார். கவின் - மோனிகா டேவிட் தம்பதியின் திருமணம் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது.
[Z5GBR}
கவின் - மோனிகா ஜோடியை நெருங்கிய நண்பர்களும், திரைத்துறை பிரபலங்களும் நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர். கவின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.