Wednesday, Apr 30, 2025

பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடவில்லை..? அதிரவைத்த தங்கர்பச்சனின் பதிவு

Dr. S. Ramadoss PMK BJP Cuddalore Election
By Karthick a year ago
Report

வரும் மக்களவை தேர்தலில் கடலூர் தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் இயக்குனர் தங்கர் பச்சன்.

பாமக

பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமகவிற்கு பாஜக 10 இடங்களை ஒதுக்கியுள்ளது. அண்மையில் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டனர் பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ்.

thankar-pachan-confirms-contesting-in-election

கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், இன்று வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளார் இயக்குனர் தங்கர்பச்சன். கடலூர் தொகுதியில் அவர் பாமக சார்பில் போட்டியிடுகிறார்.

பாமக வேட்பாளரான இயக்குனர் தங்கர்பச்சன் - வெளியான பாமக வேட்பாளர் பட்டியல்..!

பாமக வேட்பாளரான இயக்குனர் தங்கர்பச்சன் - வெளியான பாமக வேட்பாளர் பட்டியல்..!

அறிவிக்கப்பட்டது முதலே, தங்கர் பச்சனின் அரசியல் குறித்த பல கருத்துக்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டன. அதன் ஒரு பகுதியாக அவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

தங்கர்பச்சன் விளக்கம்

 அச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது இது தொடர்பாக தற்போது அவரே தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். ராமதாஸுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான்,

thankar-pachan-confirms-contesting-in-election

போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என கடுமையாக பதிவிட்டுள்ளார்.