பாமக வேட்பாளரான இயக்குனர் தங்கர்பச்சன் - வெளியான பாமக வேட்பாளர் பட்டியல்..!
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக - பாமக கூட்டணி
பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ் அணி, அமமுக, பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் போன்றோர் கூட்டணி அமைத்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக பாமக - பாஜக கூட்டணி அமைந்த நிலையில், அது தேர்தல் அரசியலில் எம்மாதிரியான மாற்றத்தை கொண்டுவரும் என்பதை தேர்தல் முடிவில் தான் பார்க்கவேண்டும்.
வேட்பாளர் பட்டியல்
தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், வேட்பாளர்களை கட்சிகள் மாறி மாறி அறிவித்து வருகிறார்கள். நேற்று பாஜகவின் வேட்பாளர், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போன்றோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பாமக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
10 தொகுதிகளில் போட்டியிடும் பாமக 9 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
கடலூர் - தங்கர் பச்சன்
தருமபுரி - அரசாங்கம்
விழுப்புரம் - முரளி சங்கர்
திண்டுக்கல் - திலகபாமா
அரக்கோணம் - கே.பாலு
ஆரணி - கணேசகுமார்
மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி - தேவதாஸ்
சேலம் - அண்ணாதுரை
ஒரே ஒரு தொகுதி வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை.