நீலகிரியில் நட்சத்திர வேட்பாளர்கள் - ஆ.ராசா vs தனபால் மகன் vs எல்.முருகன்..! களம் யாருக்கு..?
நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா, அதிமுக தரப்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
நீலகிரி தொகுதி
நீலகிரி மக்களவை தொகுதி இம்முறை பெரும் கவனத்தை பெற்றுள்ள தொகுதியாக மாறியுள்ளது. திமுக - அதிமுக சார்பில் நேரடி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுளார்கள்.
திமுக சார்பில் ஆ.ராசா - அதிமுக தரப்பில் தனபாலின் மகன் லோகேஷ் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுவே பெரும் போட்டியாக இருக்கும் நிலையில், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதன் காரணமாக, கடுமையான மும்முனை போட்டி உருவாகியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மும்முனை போட்டி
திமுகவின் பெரும் ஆதிக்க சக்தியாக இருக்கும் ஆ.ராசா, இம்முறையும் பெரும் செல்வாக்குடன் களமிறங்குகிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே போல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சபாநாயகராக நியமிக்கப்பட்ட தனபால் நீலகிரி மாவட்டத்தில் அதிமுகவின் முக்கிய முகமாக திகழ்கிறார்.
அவரின் மகனுக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்பட்டதால், மக்களின் கவனம் அவர் பக்கம் திரும்பும் வாய்ப்பும் இருக்கிறது. 3-வது மத்திய இணையமைச்சர் எல்.முருகன். தமிழக பாஜகவில் முக்கிய முகம் எல்.முருகன்.
சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட 3 முறை அவர் தோல்வியடைந்திருந்தாலும், 2021-ஆம் ஆண்டில் ராஜ்யசபா எம்.பி - மத்திய இணையமைச்சர் என அவரின் செல்வாக்கு தேசிய அளவில் அதிகரித்துள்ளது. அவரே வேட்பாளராக களமிறங்குகிறார் என்பதால் நீலகிரி தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.