லிப்ட் கொடுப்பதாக கூறி 45 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - தஞ்சையில் பரபரப்பு!

Tamil nadu Sexual harassment Thanjavur
By Vidhya Senthil Sep 06, 2024 04:04 AM GMT
Report

தஞ்சையில் லிப்ட் கொடுப்பதாக கூறி ஒரு இருசக்கர வாகனத்தில் பெண்ணை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

தஞ்சை

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி இரவு 45 வயது பெண் ஒருவர் தனது மகள் வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்திற்காகக் காத்திருந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் பிரவீன் (32), ராஜ்கபூர் (25) என்ற வாலிபர்கள் வந்துள்ளனர். அப்போது அந்த 45 வயது பெண்ணிடம் பேருந்து வர தாமதமாகும் எனக் கூறியுள்ளனர்.

sexual harassment

இதனையடுத்து லிப்ட் கொடுப்பதாகக் கூறி தங்களுடைய இருசக்கர வாகனத்தில் அப்பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அந்தப் பெண் செல்ல வேண்டிய ஊரைத் தாண்டியதும்,வாகனத்தை நிறுத்தும் படி கூறியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள்; 7 நாட்களில் மரண தண்டனை - மம்தா அதிரடி!

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள்; 7 நாட்களில் மரண தண்டனை - மம்தா அதிரடி!

ஆனால் பிரவீன் மற்றும் ராஜ்கபூர் இருவரும் சேர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத வயல் பகுதிக்கு அப்பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து அப்பெண் கூச்சலிடவே அவரை தாக்கி விட்டு, பிரவீன், ராஜ்கபூர் இருவரும் வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 அதிர்ச்சி சம்பவம்

இந்நிலையில், வீட்டிற்கு வருவதாகக் கூறி, தனது அம்மா வெகுநேரமாகியும் வரவில்லை என்பதால் மகன் தேடி வந்துள்ளார். அப்போது வழியில் அம்மா அழுதுகொண்டு இருப்பதைப் பார்த்து மகன் அதிர்ச்சி அடைந்தார்.

லிப்ட் கொடுப்பதாக கூறி 45 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - தஞ்சையில் பரபரப்பு! | Thanjavur Woman Raped By 2 Arrested

இந்தச் சம்பவம் குறித்து தனது மகனிடம் கனத்த இதயத்துடன் நடந்ததை அனைத்தையும் கூறியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் . தொடர்ந்து பிரவீன், ராஜ்கபூர் இருவரையும் கைது செய்தனர்.