அடேங்கப்பா, 500 வகையான சீர்வரிசைகளா? - ஊரையே திரும்பிப்பார்க்க வைத்த பிரமாண்ட நிச்சயதார்தம்..!

Tamil nadu Thanjavur
By Vinothini Jun 22, 2023 06:02 AM GMT
Report

தஞ்சையில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற ஒரு நிச்சயதார்த்த விழா தற்போது வைரலாகி வருகிறது.

நிச்சயதார்த்த விழா

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா அருமுளை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் மலேசியாவை சேர்ந்த இவரது உறவுக்கார பெண்ணான தினோஷாலிக்கும் சமீபத்தில் நிச்சயம் நடந்தது.

thanjavur-engagement-function-goes-viral

இது தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் பெற்றோர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் திருமண நடந்தது. மேலும், இடஙக நிச்சயம் ஊர் மக்களை திரும்பி பார்க்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

வைரல்

இதனை தொடர்ந்து, அந்த நிச்சயதார்த்த விழாவில் மாப்பிள்ளை வீட்டார்கள் அவர்களின் அருமுளை கிராமத்தில் இருந்து புறப்பட்டனர். மேலும், அவர்கள் 15 டிராக்டர்களில் 500 வகையான சீர்வரிசை தட்டுகளுடன் வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக இந்த விழாவிற்கு சென்றனர்.

thanjavur-engagement-function-goes-viral

இந்த விழாவில் 3000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு பிரம்மாண்டமான முறையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் நடைபெற்றது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.