நெல் விளையும் தஞ்சையில் நிலக்கரி சுரங்கமா ? வெளியான அதிர்ச்சி தகவல்
புதிய நிலக்கரி சுரங்க திட்டம் குறித்து விவாசாயிகள் கவலை அடைய வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிலக்கரி டெண்டர்
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாமான தஞ்சையை சுற்றியுள்ள வடசேரி, மகாதேவப்பட்டினம், உள்ளிக்கோட்டை , குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை , கீழ்க்குறிச்சி , அண்டமி ,நெம்மேரி, கொடியாளம் கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு விளக்கம்
மத்திய அரசின் இந்த முடிவுக்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தமிழக அர்சு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் , இந்த அறிவிப்பு ஆரம்ப கட்ட ஆய்வுக்காக வெளியிடபட்ட அறிவிப்பு, புதிய நிலக்கரி சுரங்க திட்டம் குறித்து விவசாயிகள் கவலை அடைய வேண்டான் என்றும் பாதுகாகக்ப்பட்ட வேளாண் மண்டல் சட்டம் அமலில் உள்ளதால் அனுமதி தரப்படாது என கூறியுள்ளது