உங்களுக்கெல்லாம் எதுக்கு ஓட்டு..இந்த ஊர்'ல பொறந்ததே அசிங்கமா இருக்கு !! தங்கர்பச்சான் ஆவேசம்
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் நடிகர் - இயக்குனர் தங்கர்பச்சான்.
தோல்வி
மக்களவை தேர்தல் 4 முனை போட்டியாக தமிழகத்தில் இருந்தது. இதில், பாஜக தலைமையிலான கூட்டணி மீது பலருக்கும் எதிர்பார்ப்புகள் எழுந்தன. கடலூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாமக சார்பில் களமிறக்கப்பட்டார் இயக்குனர் நடிகர் தங்கர்பச்சான்.
அவருக்கு இதுவே முதல் தேர்தலாகும். தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெறும் ஏமாற்றத்தையே கொடுத்தது. 40/40 என தமிழகம் - புதுவை இரண்டிலும் தோல்வியடைந்தது. தங்கர்பச்சான் 205244 வாக்குகளை மட்டுமே பெற்று 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
கோபத்துடன்
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவடைந்ததை அடுத்து மக்களுக்கு நன்றி சொல்ல தங்கர்பச்சான் சென்றார். நன்றி தெரிவிக்க வந்தவர், உங்களுக்கெல்லாம் எதுக்கு ஓட்டு? தேர்தல் எதுக்கு? இந்த கடலூர் மாவட்டத்தில் பிறந்தது அவமானமாக உள்ளது என கடும்கோபமாக பேசியுள்ளார்.
யார் எப்படியோ மக்களை விட்டு நான் போக முடியாது.
பாமகமக்களுக்காக பாடுபடும் கட்சி. மக்களுக்காக ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வரமாட்டார்கள். போராட்ட குணம் இல்லாத மக்கள் எதுக்கு உங்களுக்கெல்லாம் ஓட்டு? ஓட்டை வச்சு என்ன செய்ய போறீங்க? வாய் இருந்தா தான் பிழைக்க முடியும் என ஆவேசமாக பேசினார்.