கிளி ஜோசியருக்கு அடுத்து குடுகுடுப்பைக்காரரை டார்கெட் செய்த தங்கர்பச்சான்!
பா.ம.க வேட்பாளரான இயக்குனர் தங்கர்பச்சான் குடுகுடுப்பைக்காரரிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டார்.
தங்கர்பச்சான்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தமிழக அரசியல் காட்சிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில், கடலூர் தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரான பிரபல சினிமா இயக்குனர் தனக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே கடலூர், தென்னம்பாக்கத்தில் பரப்புரையாற்றிய அவர் ஒரு கிளி ஜோசியரிடம் ஜோசியம் பார்த்தார். கிளி எடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று இருந்ததாக ஜோசியர் தெரிவித்தார்.
குடுகுடுப்பைக்காரர்
இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலானது. இதனைத் தொடர்ந்து தங்கர்பச்சானுக்கு ஜோசியம் பார்த்த கிளி ஜோசியரை வனத்துறையினர் கைது செய்தனர். சட்டப்படி கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், பண்ருட்டி பகுதியில் தங்கர்பச்சான் பிரச்சாரம் செய்கிறார். அங்கிருந்த குடுகுடுப்பைகாரரை தங்கர்பச்சான் சந்தித்தார்.அப்போது குடுகுடுப்பைகாரர், "உங்களுக்கு நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது. நீங்கள் ஜெயிக்க போகிறீர்கள்" தெரிவித்தார். பிறகு அவருக்கு சால்வை போர்த்தி தங்கர்பச்சான் ஆசீர்வாதம் வாங்கி கொண்டார்.