தங்கர் பச்சானுக்கு ஜோசியம் பார்த்ததால் வந்த வினை - கைதான கிளி ஜோசியர்..!
கடலூரில் பாமக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் இயக்குனர் தங்கர் பச்சான்.
கடலூர் வேட்பாளர்
கடலூர் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார் நடிகர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் தங்கர் பச்சான்.
தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், அண்மையில் பிரச்சாரத்தின் நடுவே சாலையோரம் அமர்ந்திருந்த கிளி ஜோசியரிடம் குறி கேட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
கைது
இதனை தொடர்ந்து தற்போது அந்த கிளி ஜோசியக்காரர் பெரும் சிக்கலை சந்தித்துள்ளார். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். வேட்பாளருக்கு ஜோசியம் பார்த்ததால் தந்து வாழ்வாதாரத்தை ஒருவர் இழந்துள்ள சம்பவம் அரசியல் பிரச்சார இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.