விரைவில் ராஜினாமா? செந்தில் பாலாஜிக்கு பதில் இவர் - திமுகவில் பரபரப்பு
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜி ராஜினாமா
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அடுத்த சில நாட்களில் மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றார். தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த வித்யா குமார் மற்றும் அமலாக்கத் துறையினர் மனுதாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என்று கேள்வி எழுப்பி, வழக்கை 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. இதனால் செந்தில் பாலாஜி பதவி விலகும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவருக்கு பதில்..
இதற்கிடையில், அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சைத் தொடர்து அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. எனினும், அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனையடுத்து அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, செந்தில் பாலாஜியிடம் இருக்கும் மின்சாரத்துறை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு துறை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் முத்துச்சாமி, வெள்ளக்கோவில் மு.பெ சாமிநாதன் ஆகிய இருவரில்
ஒருவருக்கு கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் இலாகாக்கள் வழங்கப்படக்கூடும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.