சீமானை கூட்டணியில் இணைக்க குட்டிக்கரணம் போடும் பாஜக - ஆனால் நாதகவின் ஸ்கெட்ச்!
அதிமுக - பாஜக கூட்டணியில் சீமான் இணைவாரா என பரபரப்பு நிலவி வருகிறது.
அதிமுக - பாஜக
திமுக கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்னும் சில கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் சீமானை இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதனை சீமான் திட்டவட்டமாக மறுத்தார்.
இணையும் சீமான்
தொடர்ந்து பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ள நயினார் நாகேந்திரன், சீமானின் நாம் தமிழர் கட்சியும் பாஜக - அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் என் கட்சியில் இருந்து விலகுபவர்களை, வேறு கட்சிக்கு செல்வதற்கு பதிலாக விஜய் கட்சிக்கு செல்லுமாறு கூறினேன்.
காரணம், அவர்களை அங்கு ஒருநாளும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். என் தலைமையை ஏற்று ஆரிய - திராவிட கலப்பில்லாத கட்சிகள் வந்தால் கூட்டணி பற்றி யோசிப்பேன் என விடாப்பிடியாக நிற்கிறார். இதன்மூலம் விஜய்க்கு சூசகமாக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கிறாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
சீமான் கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் துணை முதல்வர் பதவியை எதிர்பார்ப்பார். திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளை எதிர்த்த அரசியல் கேள்விக்குறியாகும். மேலும் கடும் விமர்சத்திற்குள்ளாவார் என்பது குறிப்பிடத்தக்கது.