தென்மாநிலங்களுக்கு குறைந்த நிதி; இது கூட்டுறவு ஆட்சியா? ஒரவஞ்சனையா? - தங்கம் தென்னரசு கேள்வி
மத்திய அரசின் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு வரி பகிர்வு
வரி வருவாயில் கிடைக்கும் தொகையை, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பகிர்ந்து வழங்குகிறது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 31,039.84 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பீகாருக்கு 17,403.36 கோடி ரூபாயும், மத்திய பிரதேசத்திற்கு 13,582.86 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்திற்கு 13,017.06 கோடி ரூபாயும், மகாராஷ்டிராவிற்கு, 10,930.31 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது.
தங்கம் தென்னரசு
மேலும், தமிழ்நாட்டிற்கு 7,057.89 கோடி ரூபாயும், கர்நாடகாவிற்கு 6,310.40 கோடி ரூபாயும், கேரளாவிற்கு 3,330.83 கோடி ரூபாயும், ஆந்திராவிற்கு 7,002.52 கோடி ரூபாயும், தெலுங்கானாவிற்கு 3,637.09 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வில், வழக்கம் போல் பாஜக ஆளும் உத்தர பிரதேசம் , மத்திய பிரதேசம், பீகாருக்கு 40% நிதி வழங்கப்பட்டுள்ளது.
Five Southern states that drive India's economy get just 15% allocation, while Bihar, UP, and MP together corner nearly 40%. Is this cooperative federalism or centralised discrimination? pic.twitter.com/KBDMq2pJFN
— Thangam Thenarasu (@TThenarasu) January 11, 2025
அதே வேளையில், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களித்து வரும், தமிழ்நாடு உட்பட 5 தென் மாநிலங்களுக்கு வெறும் 15% நிதியும் வழங்கியுள்ளது ஒன்றிய அரசு. இதுதான் கூட்டுறவு கூட்டாட்சியா? அல்லது ஓரவஞ்சனையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.