மத்திய அரசு நிதி பகிர்வு - தமிழ்நாட்டிற்கு 7,268 கோடி; உத்தரப் பிரதேசத்திற்கு 31,962 கோடி
மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை விடுத்துள்ளது.
மத்திய அரசு நிதி பகிர்வு
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. பண்டிகை காலத்தையொட்டி, அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதல் தவணையாக ரூ.89,086 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இந்த வெளியீடு வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்கும், மாநிலங்களின் வளர்ச்சி சார்ந்த செலவினங்களுக்கும் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு நிதி
இதில், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பீகாருக்கு ரூ.17,921 கோடி ரூபாயும், மத்திய பிரதேசத்திற்கு 13,987 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்திற்கு 13,404 கோடி ரூபாயும், மகாராஷ்டிராவிற்கு 11,255 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது.
மேலும், தமிழ்நாட்டிற்கு 7268 கோடி ரூபாயும், கேரளாவிற்கு 3,430 கோடி ரூபாயும், ஆந்திராவிற்கு 7,211 கோடி ரூபாயும், தெலுங்கானாவிற்கு 3,745 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
? Union Government releases tax devolution of ₹1,78,173 crore to State Governments, including one advance instalment of ₹89,086.50 crore in addition to regular instalment due in October, 2024
— Ministry of Finance (@FinMinIndia) October 10, 2024
?Advance instalment released in view of upcoming festive season and to enable… pic.twitter.com/1wBOacu5mo
வெளியிடப்பட்ட மொத்த நிதியில் உத்தரப்பிரதேசம் மட்டும் 17.9 சதவீதத்தைப் பெற்றாலும், தென்னிந்திய மாநிலங்கள் 15.8 சதவீதத்தைப் பெற்றுள்ளன.