செப்டம்பர் 28 உதயநிதி துணை முதல்வரா? அமைச்சர் சொன்ன உறுதி

Udhayanidhi Stalin Kanchipuram DMK T. M. Anbarasan
By Karthikraja Sep 19, 2024 08:41 PM GMT
Report

செப்டம்பர் 28 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அமைச்சர்களும் மேடைகளில் இந்த கருத்தை பேசி வந்தனர்.

udhayanidhi stalin

சமீபத்தில் நடந்த திமுக பவள விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஸ்டாலின் மேடையில் இருக்கும் போதே உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவது தொடர்பான கோரிக்கையை வைத்தார். 

இந்த நாளில்தான் உதயநிதி பதவியேற்பார் - அடித்து சொல்லும் தமிழிசை

இந்த நாளில்தான் உதயநிதி பதவியேற்பார் - அடித்து சொல்லும் தமிழிசை

தமோ அன்பரசன்

இந்நிலையில் அமைச்சர் தமோ அன்பரசனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிய போது,அடுத்த 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி, துணை முதல்வராக அறிவிக்கப்படுவார். ஏன் 10 நாள், நாளை கூட அறிவிப்பு வரலாம். இன்னும் ஓரிரு நாட்களில் கூட இந்த அறிவிப்பு வரும் என தெரிவித்திருந்தார்.

T. M. Anbarasan

வரும் 28ஆம் தேதி திமுக பவள விழா பொதுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பொதுக்கூட்டத்தில் வைத்து அறிவிப்பு வெளியாகலாம் என திமுகவினர் பேசி வருகின்றனர்.