5 கோடி பேரம்..அடியாட்களை கொண்டு - ஓபிஎஸ் செயல் - தமிழ்மகன் உசேன் பகிர்
தன்னிடம் 5 கோடி பணத்தை கொடுத்து அனுப்பி ஓபிஎஸ் பேரம் பேசியதாக தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
அடியாட்களை வைத்து..
அ.தி.மு.கவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அவர், உச்ச நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடக் கூடாது என்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தன் வீட்டிற்கு ரூ.5 கோடி கொடுத்து அனுப்பினார் என்றும் இதனை நேராக சென்று இபிஎஸ்'ஸிடம் சொன்ன போது தனியாக ரூம் போட்டுக்கொடுத்து 15 அடியாட்களையும் அனுப்பிப் பாதுகாத்தார் என்ற பகிர் தகவலை கூறினார்.
உயிர் இயக்கத்திற்கே...
மேலும் அச்சமயம், உன் தலையை உயிரை எடுத்துவிடுவேன் போன்றெல்லாம், அரைக்கூவல் விடுத்தார்கள் என்ற தமிழ் மகன் உசேன், அத்தனையும் தாங்கிக்கொண்டு, உயிர் இந்த இயக்கம்தான் என்று இருந்ததாக தெரிவித்தார்.
ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பிற்கு மத்தியில் இன்னும் கோஷ்டி மோதல் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும் நிலையில், அதிமுகவின் அவை தலைவர் பொதுவெளியில், தன்னிடம் பேரம் பேசப்பட்டதையும், அடியாட்களை பயன்படுத்தியதை குறித்தும் பேசியிருப்பது சலசலப்பை உண்டாகியிருக்கின்றது.