இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி; பொறுத்திருந்து பாருங்கள் - ஓ.பன்னீர்செல்வம்!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Jiyath Feb 26, 2024 08:40 AM GMT
Report

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் 

புதுச்சேரியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்.

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி; பொறுத்திருந்து பாருங்கள் - ஓ.பன்னீர்செல்வம்! | O Panneerselvam About Edappadi Palanisamy

பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் 10 ஆண்டாக தொடர்ந்து நீடித்து வருகிறோம். எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணியிலிருந்து சென்றுவிட்டார். இரட்டை இலையில் எப்படி போட்டியிடுவோம்? என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

எல்லா தீர்ப்புகளும் எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக தீர்ப்பாகத்தான் வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சிவில் சூட்டில் வழங்கப்படும் தீர்ப்பே இறுதியானது.

இணைந்து பணியாற்றுகிறோம்

எடப்பாடி பழனிசாமியை எந்த சூழ்நிலையிலும், யாரும் நம்பத் தயாராக இல்லை என்ற நிலை அரசியலில் ஏற்பட்டுள்ளது. அவருக்கு யாரெல்லாம் நல்லது செய்தார்களோ, அவர்களுக்கு நன்றியில்லாமல் அவர் நடந்து கொண்டுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி; பொறுத்திருந்து பாருங்கள் - ஓ.பன்னீர்செல்வம்! | O Panneerselvam About Edappadi Palanisamy

இதனால் அவருடன் கூட்டணி அமைக்க, அரசியல் கட்சிகள் தவிர்த்து வருகின்றன. பா.ஜனதாவுடன் தொகுதி பங்கீடு முடித்தவுடன் தகவல் தெரிவிப்போம். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், நாங்களும் இணைந்து பணியாற்றுகிறோம்.

தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.