"அது மட்டும் கூடாது"!!ஐஸ்வர்யாவிற்கு என்ன கண்டிஷன் தம்பி ராமையா போட்டார் தெரியுமா??

Arjun Thambi Ramaiah
By Karthick Nov 02, 2023 03:53 PM GMT
Report

தற்போது உமாபதி - ஐஸ்வர்யா அர்ஜுன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐஸ்வர்யாவிற்கு தம்பி ராமையா முக்கிய கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அர்ஜூன் - உமாபதி

தமிழில் பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா அர்ஜுன். அதன் பின் சொல்லிவிடவா படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

thambi-ramaiah-conditions-aiswarya-after-marriage

காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வரும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் பரவியது.

நிச்சயதார்த்தம்

அதுபோலவே இருவருக்கும் கடந்த 28-ஆம் தேதி நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்துள்ளது. இதில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

thambi-ramaiah-conditions-aiswarya-after-marriage

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உமாபதி, அதாகப்பட்டது மகா ஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.மேலும், அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி போட்டியாளராக பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவி மகனை கரம் பிடித்த "பிரம்மன்" நடிகை லாவண்யா திரிபாதி!! குவியும் பாராட்டுக்கள்!!

சிரஞ்சீவி மகனை கரம் பிடித்த "பிரம்மன்" நடிகை லாவண்யா திரிபாதி!! குவியும் பாராட்டுக்கள்!!

தம்பி ராமையாவின் கண்டிஷன்..?

இந்நிலையில், தனது வருங்கால மருமகள் ஐஸ்வர்யாவிற்கு மாமனாரான தம்பி ராமையா முக்கிய கண்டிஷன் ஒன்று போட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

thambi-ramaiah-condition-to-iswarya-after-marriage

அதாவது. ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகும் நடிக்க வரக்கூடாது என அவர் கண்டீஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும், ஐஸ்வர்யாவிற்கு 28 வயதும் உமாபதிக்கு 31வயதும் ஆவதாக கூறப்படுகிறது.