சிரஞ்சீவி மகனை கரம் பிடித்த "பிரம்மன்" நடிகை லாவண்யா திரிபாதி!! குவியும் பாராட்டுக்கள்!!

Allu Arjun Chiranjeevi Ram Charan Pawan Kalyan
By Karthick Nov 02, 2023 10:14 AM GMT
Report

பிரபல நடிகையான லாவண்யா திரிபாதி தெலுங்கு நடிகர் வருண் தேஜ்'ஜை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

லாவண்யா திரிபாதி 

தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான "பிரம்மன்" என்ற படத்தில் நடித்திருந்தவர் நடிகை லாவண்யா திரிபாதி. இதற்கு முன்பாகவே தெலுங்கில் அந்தல ராக்ஷசி என்ற படத்தில் அறிமுகமான இவருக்கு தொடர்ந்து தெலுங்கு படங்களில் வாய்ப்பு வரத்துவங்கியது.

lavanya-tripathi-marriages-varun-tej-pics-viral

நானியுடன் இவர் நடித்த "பலே பலே மகாடிவோய்" என்ற படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர், பிரபல தெலுங்கு நடிகரான வருண் தேஜ்'ஜை காதலிப்பதாக பல காலமாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

த்ரிஷாவும் இல்ல.. நிதி அகர்வாலும் இல்ல; சிம்புவுக்கு கல்யாணம் - உண்மை உடைத்த நடிகை!

த்ரிஷாவும் இல்ல.. நிதி அகர்வாலும் இல்ல; சிம்புவுக்கு கல்யாணம் - உண்மை உடைத்த நடிகை!

வருண் தேஜ்'ஜுடன் கல்யாணம்

இதனை தற்போது உண்மையாக்கி, இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்,. இத்தாலியில் பிரமாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் சிரஞ்சீவி குடும்பத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

lavanya-tripathi-marriages-varun-tej-pics-viral

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இந்த ஜோடிக்கு தெரிவித்து வருகின்றனர். வருண் தேஜ் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி மிக பெரிய ஹிட்டடித்த "ஃபிடா", ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகனாவார்.