த்ரிஷாவும் இல்ல.. நிதி அகர்வாலும் இல்ல; சிம்புவுக்கு கல்யாணம் - உண்மை உடைத்த நடிகை!
நடிகர் சிம்பு திருமணம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு
நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சித்தி இத்னானி. அதன்பின், காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில், அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், சிம்புவும் நீங்களும் காதலிக்கிறீர்கள் என தகவல் பரவுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர்,
திருமணம்?
“ கிசுகிசு பத்தியெல்லாம் நாம் ரொம்ப யோசிக்க கூடாது. சினிமாவுக் குள்ளே வந்துட்டாலே வித்தியாசமா பேசத்தான் செய்வார்கள். நிறைய விஷயம் நம்ம பத்தி நல்லதா வரும். சில விஷயங்கள் திடீர்னு தப்பா வந்துடும்.
அதுல உண்மை இல்லாட்டியும் அத நம்ப ஆரம்பிச்சுடுவாங்க. என்ன இந்த கிசு கிசுவெல்லாம் படிக்க நல்லா இருக்கும். அவ்வளவுதான். இதை யெல்லாம் ரொம்ப மைண்ட்ல ஏத்திடக் கூடாது. நம்ம வேலையை பாத்து போய்க்கிட்டே இருக்கணும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.