விஜய்யின் கடைசி படம்..நான் தான் இயக்குவேன் - உறுதி செய்த இயக்குநர்!

Vijay Tamil Cinema H. Vinoth
By Swetha Aug 16, 2024 06:46 AM GMT
Report

நடிகர் விஜய் தளபதி 69 படத்தை யார் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி படம்..

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தில் நடித்துள்ளார். இதில் இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருகிறார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் கடைசி படம்..நான் தான் இயக்குவேன் - உறுதி செய்த இயக்குநர்! | Thalapathy 69 Will Be Directed By Me Says Director

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திரைபடத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.

பிரச்சனையே அதனால தான்; அவன நம்பவே முடியாது - தனது மகன் குறித்து நடிகர் விஜய்!

பிரச்சனையே அதனால தான்; அவன நம்பவே முடியாது - தனது மகன் குறித்து நடிகர் விஜய்!

இயக்குநர்

இந்த நிலையில், அடுத்ததாக நடிகர் விஜய் 'தளபதி 69' படத்தில் நடிக்க உள்ளார். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்தபோவதாக கூறியுள்ளார்.

விஜய்யின் கடைசி படம்..நான் தான் இயக்குவேன் - உறுதி செய்த இயக்குநர்! | Thalapathy 69 Will Be Directed By Me Says Director

'தளபதி 69' படத்தை நான் தான் இயக்குகிறேன் என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் எச்.வினோத் தெரிவித்துள்ளார். மேலும் இது அரசியல் படம் அல்ல, கமர்ஷியல் படம் தான் என அவர் தெரிவித்துள்ளார்.