இந்தியில் கடும் போட்டியை உருவாக்கிய தளபதி விஜய்
மாஸ்டர் படத்தின் இந்தி உரிமையைப்பெற கடும் போட்டி நிலவி வருவதாக தாவல் வெளியாகி உள்ளன. தளபதி விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் விருந்தாக வெளியான படம் தான் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். கொரோனா பரவல் காரணமாக சுமார் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு வெளியாகி இருந்தாலும்,இந்த படம் வசூலில் பட்டையைக் கிளப்பியது.
இந்தநிலையில் மாஸ்டர் படத்தை அந்தந்த மொழிகளில் ரீமேக் செய்வதற்காக பலரும் போட்டி போட்டு வருகின்றனர். குறிப்பாக மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான உரிமையை பெற இந்தி தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம்.
விரைவில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்க மாஸ்டர் படக்குழு திட்டமிட்டுள்ளது.