தளபதி 65 பற்றிய புதிய அப்டேட்: விஜய்க்கு வில்லனாகும் விஜய்

tamil actor flim
By Jon Jan 19, 2021 05:46 PM GMT
Report

தளபதி 65 படத்தில் தளபதி விஜய் அவர்களுக்கு வில்லனாகும் மேலும் ஒரு கதாநாயகன் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் தற்போது திரையரங்குளில் வெளியாகி 'மாஸ்டர்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனையடுத்து தளபதி விஜய் அவர்கள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கான கதாபாத்திர தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தளபதி 65 படத்தில் அவருக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அருண் விஜய் அவர்கள் தல அவர்களுக்கு என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார். இந்த நிலையில் தளபதி அவர்களுக்கும் வில்லனாக நடிக்கவிருப்பது தளபதி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Gallery