சென்னையின் புதிய வீரர்களை சீருடைக் கொடுத்து வரவேற்ற தல தோனி
சென்னையின் புதிய வீரர்களுக்கு தல தோனி அவர்கள் சீருடை கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களுக்கு அணியின் சீருடை வழங்கி வரவேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. புதிய வீரர்களுக்கு கேப்டன் மகேந்திர சிங் தோனி சீருடையை வழங்கி அவர்களை வரவேற்றார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிருஷ்ணப்பா கௌதம், மொயீன் அலி, சேத்தேஷ்வர் புஜாரா, பகத் வர்மா, ஹரி நிஷாந்த், ஹரிசங்கர் உள்ளிட்ட வீரர்களைப் புதிதாகத் தேர்வு செய்தது.
அவர்களும் அணியில் இணைந்து பயிற்சியைத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் புதிய வீரர்களை வரவேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
தலதா மாளிகை குண்டுவெடிப்புக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பில்லை - மகாநாயக்க தேரரிடம் வாங்கி கட்டிய எதிர்கட்சி எம்பிக்கள் IBC Tamil
ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை IBC Tamil