ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண சட்டம் அமல் - ஒரே நாளில் இவ்வளவு திருமணமா?
ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Same Sex Marriage
தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணத்திற்கு தாய்லாந்து அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, இந்தச் சட்டம் நேற்று முதல் (ஜன.23) அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் பாங்காக்கில் ஒரேநாளில் 300க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு உற்சாகமாய் ஃபோட்டோஸ் எடுத்துக் கொண்டனர். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
சம உரிமை
இதுகுறித்து பேசியுள்ள பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா, இச்சட்டம் பாலியல் பாகுபாடு, இனம் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் அரவணைக்கிறது. அனைவருக்குமான சம உரிமை மற்றும் கண்ணியத்தை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஒரே பாலின தம்பதிகள் தங்கள் சொத்துகளைப் பெறவும், குழந்தைகளைத் தத்தெடுக்கவும் சம உரிமைகளைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் முதல் தென்கிழக்காசிய நாடு என்ற பெருமையைத் தாய்லாந்து பெற்றுள்ளது. தைவானும் நேபாளமும் ஏற்கெனவே இந்த திருமணங்களை அங்கீகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.