பெண்கள் 9 வயதிலே திருமணம் செய்யலாம் - நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம்
பெண்களின் திருமண வயதை 9 ஆக ஈராக் குறைத்துள்ளது.
திருமண வயது
உலகின் பல நாடுகளில் குறைந்த பட்ச திருமண வயது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த வயதில் திருமணம் செய்பவர்கள் அந்த நாட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.
பெரும்பாலான நாடுகள், பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் பெண்களின் திருமண வயதை 9 ஆக ஈராக் குறைத்துள்ளது.
ஈராக்
இந்த மசோதா கொண்டுவரப்பட்ட போதே, கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம், இளவயதில் கர்ப்பம் தரித்தல் ஆகிய காரணங்களை சுட்டிக்காட்டி பெண்கள் அமைப்பினர், மனித உரிமை குழுவினர் இந்த சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதை கருத்தில் கொள்ளாத ஈராக் அரசு, கடந்த செவ்வாய் கிழமை(21.01.20250) ஈராக் நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. "நீதியை மேம்படுத்துவதற்கும், மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒழுங்கமைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான படிதான் இந்த சட்டம்" என இந்த சட்ட திருத்தத்தை சபாநாயகர் மஹ்மூத் அல் மஷ்ஹதானி பாராட்டியுள்ளார்.
இந்த புதிய சட்டப்படி, ஈராக்கில் பெரும்பான்மையாக உள்ள ஷியா பிரிவு இஸ்லாமிய பெண்களின் திருமண வயது 9 ஆகவும், சன்னி பிரிவு பெண்களின் திருமண வயது 15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் 25% பெண்களுக்கு 18 வயதிற்கு முன்னதாகவே திருமணம் ஆகி விட்டதாக ஐநாவின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.