குழந்தை திருமணம்; இந்தியாவிலே தமிழகம் தான் டாப் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

Tamil nadu India Supreme Court of India
By Karthikraja Jul 11, 2024 04:30 PM GMT
Report

இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் அதிகளவில் குழந்தை திருமணம் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை திருமணம்

இந்தியாவில் திருமண வயது பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு கீழ் திருமணம் செய்தால் சட்டப்படி தண்டனைக்கு ஆளாவார்கள். ஆனால் இன்னமும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த குழந்தை திருமணம் அரங்கேறி வருகிறது. 

child marriage in india

குழந்தை திருமண தடை சட்டத்தை பெரும்பால மாநிலங்கள் சரிவர கடைப்பிடிக்கவில்லை என உச்சநீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அரசு ஊழியர்கள் மாமனார் மாமியாருடன் நேரத்தை செலவிட சிறப்பு விடுமுறை - முதலமைச்சர் உத்தரவு

அரசு ஊழியர்கள் மாமனார் மாமியாருடன் நேரத்தை செலவிட சிறப்பு விடுமுறை - முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாடு

இந்த வழக்கு விசாரணையில் குழந்தை திருமணம் தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. மத்திய அரசு அளித்த அறிக்கையில் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவிலே அதிக பட்சமாக தமிழ்நாட்டில் 8,966 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் (8,348), மேற்கு வங்கத்தில் (8,324), தெலங்கானாவில் (4,440) நடைபெற்றுள்ளன. 

child marriage in india

விசாரணையில், "குழந்தை திருமணத்தை தடுக்க எஃப்ஐஆர் பதிவு செய்வது மட்டும், சமூக அடிமட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என நீதிபதி கூறினார். இதற்கு, குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கத்தால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எந்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனக் கூறி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.