அரசு ஊழியர்கள் மாமனார் மாமியாருடன் நேரத்தை செலவிட சிறப்பு விடுமுறை - முதலமைச்சர் உத்தரவு

Government Employee Assam
By Karthikraja Jul 11, 2024 12:30 PM GMT
Report

அரசு ஊழியர்கள் பெற்றோர் மாமனார் மாமியாருடன் நேரத்தை செலவிட விடுமுறை அளித்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அசாம்

அசாம் மாநிலத்தில் ஹிமாந்தபிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அசாம் மாநில அரசு பணியாளர்களுக்கு மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

assam cm Himanta Biswa Sarma

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில், “அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா தலைமையில், 2024 ம் ஆண்டு நவம்பர் 6 மற்றும் 8 ம் தேதிகளில் மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது மாமனார்-மாமியாருடன் நேரத்தைச் செலவிடுவதற்காக சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தெரியாதா? அரசு ஊழியர் ஆகவே முடியாது - உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

தமிழ் தெரியாதா? அரசு ஊழியர் ஆகவே முடியாது - உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

விடுமுறை

மேலும், இந்த விடுப்பு “வயதான பெற்றோர் அல்லது மாமனார், மாமியாருடன் நேரத்தைச் செலவிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அவர்களை கௌரவப்படுத்தவும், மதிக்கவும், பராமரிக்கவும் மட்டுமே தவிர தனிப்பட்டவிஷயத்துக்காக பயன்படுத்த கூடாது” என்று கூறப்பட்டுள்ளது. 

பெற்றோர் அல்லது மாமனார் மாமியார் இல்லாதவர்கள் இந்த விடுமுறைக்கு தகுதி பெற மாட்டார்கள் என்றும், அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் ஊழியர்கள் படிப்படியாக இந்த விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 2021ல் பதவியேற்ற பிறகு தனது முதல் சுதந்திர தின உரையில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.