தமிழ் தெரியாதா? அரசு ஊழியர் ஆகவே முடியாது - உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

Tamil nadu Madras High Court
By Sumathi Jun 06, 2024 04:38 AM GMT
Report

அரசு பணிக்கான தேர்வு குறித்த முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அரசு பணி தேர்வு  

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2021 முதல் அரசு தேர்வு எழுத தமிழ் கண்டிப்பாக தெரிய வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணையும் பிறப்பித்தது.

தமிழ் தெரியாதா? அரசு ஊழியர் ஆகவே முடியாது - உறுதி செய்த உயர்நீதிமன்றம்! | Tamil In The Government Job Exam Court Verdiction

அரசுப் பணிக்கு நடக்கும் தேர்வில், தமிழ் மொழித் தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பாணையை எதிர்த்தும்,

730 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்- அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கொடுத்த முக்கிய அறிவிப்பு..!

730 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்- அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கொடுத்த முக்கிய அறிவிப்பு..!

 நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ் மொழித் தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு, திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை எதிர்த்தும் நிதேஷ் என்பவர் உள்பட 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

chennai high court

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இதுதொடர்பான அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில், அரசு பணிகளுக்கு தமிழ் மொழித்தாளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்ற அரசின் கொள்கை முடிவில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மீண்டும் வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.