பணி திருப்தி இல்லையென்றால் நடவடிக்கை : அரசு வழக்கறிஞர் ஜின்னா எச்சரிக்கை
பணி திருப்திகரமாக இல்லையென்றால், அவர்கள் பற்றி மேல் நடவடிக்கைக்காக அரசுக்கு அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்துள்ளார்.
குற்றவியல் வழக்குரைஞர்கள்
சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா, குற்ற வழக்குகளை நடத்தும்போது தண்டனை வாங்கித் தர வேண்டும் என்ற ஒரே நோக்குடன் வழக்கினை நடத்தாமல் நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என கூறினார்.
பொதுமக்கள் தான் முதலில்
தொடர்ந்து பேசிய ஜின்னா குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடக்கூடாது என்கிற எண்ணத்தோடு வழக்குகளை நடத்த வேண்டும். அரசு குற்ற வழக்குரைஞர் காவல்துறையின் வழக்குரைஞர் அல்ல.
அவர்கள் பொதுமக்களுக்கான வழக்குரைஞர்கள் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். ஒரு சில காவல் அதிகாரிகள் ஜோடித்து போடும் பொய் வழக்குகளுக்குத் துணை போகாமல் நீதிமன்றம் மற்றும்அரசு வழக்கறிஞர்கள் உதவ வேண்டும் என கூறினார்