தன்பாலின திருமணம்...அங்கீகரித்த முதல் தென்கிழக்கு ஆசிய நாடு இதுவா?

Thailand LGBTQ World
By Swetha Jun 19, 2024 08:05 AM GMT
Report

தென்கிழக்கு ஆசிய நாட்டில் தன்பாலின திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தன்பாலின திருமணம் 

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து அரசு தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இந்த வகை சட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து அறியப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியானது.

தன்பாலின திருமணம்...அங்கீகரித்த முதல் தென்கிழக்கு ஆசிய நாடு இதுவா? | Thailand Govt Apporves Lgbtq Marriage

இதற்கான சட்ட மசோதாவை அந்த நாட்டின் செனட் மேல்சபை உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றினர். அடுத்த 120 நாட்களுக்குள் இது குறித்த தகவல் அந்த நாட்டின் அரசிதழில் முறைப்படி இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்பாலின ஈர்ப்பு.. கணவனின் உறவுக்கார 16 வயது சிறுமியை திருமணம் செய்த மனைவி!

தன்பாலின ஈர்ப்பு.. கணவனின் உறவுக்கார 16 வயது சிறுமியை திருமணம் செய்த மனைவி!

மசோதா நிறைவேற்றம்

இந்த விஷயத்தை கொண்டாடும் விதமாக தன்பாலின ஆர்வலர்கள் மற்றும் எல்ஜிபிடி சமூகத்தினர் ஒன்று கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது வரலற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்றும் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஜூன் மாதம் தொடக்கத்தில், பாங்காக் நகர வீதிகளில் LGBTQ குழுவினர்கள் பேரணி நடத்தினர்.

தன்பாலின திருமணம்...அங்கீகரித்த முதல் தென்கிழக்கு ஆசிய நாடு இதுவா? | Thailand Govt Apporves Lgbtq Marriage

அப்போது அந்த நாட்டின் பிரதமர் ஸ்ரேத்தா தாவிசின் வானவில் சட்டையை அணிந்து பங்கேற்றார். இது மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் தாய்லாந்தின் பங்கினை உலக நாடுகளுக்கு சுட்டிக்காட்டும்

என அந்த நாட்டைச் சேர்ந்த தன்பாலின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் மிக பிரபலமாக உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாக தாய்லாந்து நாட்டின் பல்வேறு இடங்கள் உள்ளன.