தன்பாலின ஈர்ப்பு.. கணவனின் உறவுக்கார 16 வயது சிறுமியை திருமணம் செய்த மனைவி!

Sexual harassment India Crime Madhya Pradesh
By Jiyath Apr 02, 2024 09:23 AM GMT
Report

சிறுமியை கடத்தி திருமணம் செய்து கணவன்-மனைவி போல் வாழ்ந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 

இருவர் மாயம் 

மத்தியப் பிரதேச மாநிலம் உமர்காலி கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான இளைஞர். இவர் கடந்த ஆண்டு 24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த பெண்ணுக்கு தனது கணவரின் நெருங்கிய உறவினர் ஒருவரின், 16 வயது மகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தன்பாலின ஈர்ப்பு.. கணவனின் உறவுக்கார 16 வயது சிறுமியை திருமணம் செய்த மனைவி! | Lesbian Woman Arrested In Madhya Pradesh

இந்த பழக்கம் நாளடைவில் மிகவும் நெருக்கமாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் திருமணமான இளம்பெண்ணும், 16 வயது சிறுமியும் மாயமாகினர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர்.

தன்பாலின ஈர்ப்பு 

இந்நிலையில் கடந்த வாரம் இருவரையும் மீட்ட போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், இந்த சம்பவத்துக்கு ஓரினச்சேர்க்கை தான் முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.

தன்பாலின ஈர்ப்பு.. கணவனின் உறவுக்கார 16 வயது சிறுமியை திருமணம் செய்த மனைவி! | Lesbian Woman Arrested In Madhya Pradesh

மேலும், இந்த சம்பவம் குறித்து பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், "திருமணமான அந்த 24 வயது பெண்ணுக்கு, 16 வயது சிறுமியின் மீதான மோகத்தால் அவரை ஏமாற்றி தாம்நோட் மற்றும் இந்தூருக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்த வேளையில் திருமணம் செய்து கணவன்-மனைவி போல் அவர் வாழ்ந்துள்ளார். தற்போது கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து திருமணமான 24 வயது பெண்ணை கைது செய்துள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.