ஊழியர்கள் காதலியுடன் நேரம் செலவிடனுமா? சம்பளம் கொடுத்து லீவும் தரும் கம்பெனி!
Thailand
Relationship
By Sumathi
a year ago
ஊழியர்கள் காதலியுடன் நேரம் செலவிட கம்பெனி ஒன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பை அறிவித்துள்ளது.
ஊழியர் நலன்
தாய்லாந்து, பாங்காக்கில் மார்க்கெட்டிங் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்நிறுவனம் ஊழியர்களின் நலனை மேம்படுத்தவும், ஊழியர்களை குஷிப்படுத்தவும் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.
அசத்தல் சலுகை
அந்த வரிசையில், காதலியுடன் நேரம் செலவிட வசதியாக, சம்பளத்துடன் லீவு வழங்கப்படுகிறது. மேலும், தேவையான நாட்கள் லீவு எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.
உங்கள் நலனே எங்கள் நலன்.
நீங்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் தான் நிறுவனத்தில் வேலை நன்றாக நடக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.