இங்கு காதலிகளை வாடகைக்கு எடுக்கலாம் - 1 மணி நேரத்திற்கு இவ்வளவாம்!
காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ள அரசே அனுமதி வழங்கியுள்ளது.
காதலி வாடகைக்கு..
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பானில் தனியாக வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், வாடகைக்கு காதலர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஜப்பான் அரசு கொண்டுவந்துள்ளது.
பெரும்பாலான மக்கள் சிங்கிளாக இருப்பதால், மனச்சோர்வுக்குள்ளாகி தவறான முடிவுகளை எடுக்க நேரிடுகிறதாம். எனவே இந்த முடிவு எடுத்ததாகத் தெரிகிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் மூன்றாயிரம் என்ற விகிதத்தில், குறைந்தது ஒரு காதலியை இரண்டு மணி நேரத்திற்கு வாடகை எடுக்க வேண்டும்.
அரசு அதிரடி
மேலும் உங்களுக்கான கேர்ள் பிரண்டை தேர்வு செய்ய கூடுதலாக 1200 கட்டணம் செலுத்த வேண்டும். வாடகைக்கு இருக்கும் காதலிகள் நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளக்கூடாது. அதற்காகவே இருக்கும் செயலி மூலமே தொடர்பு கொள்ள வேண்டும்.
வாடகைக்கு எடுக்கும் நபர்களிடமிருந்து எவ்விதமான பரிசுப் பொருட்களையும் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது.
இதனை கேள்விப்பட்ட இணையவாசிகள் கலவையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.