காதலிகள் வாடகைக்கு - மிகப்பெரிய தொழிலாக மாறும் புது கலாச்சாரம்!
வாடகை காதலி கலாச்சாரம் மிகப் பெரிய அளவில் தொழிலாக உருவெடுக்கிறது.
வாடகை காதலி
சீனாவில், பெண் தோழிகளை வாடகைக்கு எடுக்கும் பழக்கம் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கென பிரத்யேக இணையதளம் உள்ளது. அங்கு, காதலிகள் மற்றும் மனைவிகளை வாடகைக்கு விடும் இணையதளங்களின் தேவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பல கோடி அளவில் வியாபாரம் நடக்கிறதாம். பெண்கள் 360 டாலர்களுக்கு மேல் அதாவது 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார்கள். வேலை பார்க்கும் பெண்களும் வார இறுதி நாட்களில் வாடகைக்கு காதலியாகி நல்ல பணம் சம்பாதிக்கிறார்கள்.
புது கலாச்சாரம்
இதுகுறித்து பெண் ஒருவர், தனது வாடகை கட்டணம் 1000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரம்). பேச வேண்டுமானால் கூடுதலாக ரூ. 6000, லாங் டிரைவ்களுக்கு ரூ. 4000 வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு படி மேலே சென்று, பெற்றோர்கள் திருமணத்திற்கு வற்புறுத்தினால் அவர்களுக்கு அறிமுகம் செய்ய ஆண்களே பெண் தோழிகளை வேலைக்கு வைத்து உறவில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம், போலி திருமண சான்றிதழும் பெறுகின்றனர்.