காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்துவிட்டு வேறு பெண்னை திருமணம் செய்த காதலன்

Attempted Murder Delhi Marriage Crime
By Sumathi Feb 15, 2023 06:52 AM GMT
Report

 லிவ் இன் காதலியை கொலை செய்து காதலன் பிரிட்ஜில் வைத்துள்ளார்.

 லிவ் இன்

டெல்லி, மிட்ரான் கிராமத்தை சேர்ந்தவர் ஷகில் கெலாட் (24). ஹோட்டல் நடத்தி வருகிறார். இதற்கிடையில், போட்டி தேர்வு பயிற்சிக்காக வகுப்பில் சேர்ந்துள்ளார். அங்கு அரியானா, ஹஜ்ஜர் பகுதியை சேர்ந்த நிக்கி (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது காதலாக மாறியுள்ளது. அதன்பின், இருவரும் நொய்டாவில் ஒரே கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்துவிட்டு வேறு பெண்னை திருமணம் செய்த காதலன் | Delhi Womans Body Recovered From Fridge

மேலும், வாடகை வீட்டில் இருவரும் லிவ் இன் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் அவரவர் வீடுகளுக்கு சென்ற நிலையில், பின்னர் மறுபடியும் வர்கா பகுதியில் லிவ் இன் டுகெதரில் இருந்துள்ளனர். இந்நிலையில், கெலாட்டிற்கு அவரது பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பட்டு செய்து பெண் பார்த்துள்ளனர்.

வேறு திருமணம்

ஆனால் அவர் காதல் குறித்து கூறாமல் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து இதுகுறித்து அறிந்த நிக்கி காதலரிடம் திருமணத்தை நிறுத்த வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து காரில் வைத்திருந்த செல்போன் சார்ஜ் ஒயரை கொண்டு காதலி நிக்கியின் கழுத்தை நெரித்து ஷகில் கொலை செய்துள்ளார்.

பின்னர், நிக்கியில் உடலை தனது ஓட்டலில் உள்ள பிரிஜ்-க்குள் வைத்துள்ளார். மேலும், வீட்டில் பார்த்த பெண்ணை திருமணமும் செய்துள்ளார். இதனிடையே நிக்கி காணாமல் போனதாக எழுந்த புகாரின் விசாரணையில், காதலன் கொலை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.