தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம்- தென்கிழக்கு ஆசியாவில் முதலில் அங்கீகரித்த நாடு தெரியுமா?
உலகத்தின் பல இடங்களிலும் தன்பாலின திருமணங்கள் அதிகரித்து வருகின்றன.
தன்பாலின திருமணம்
தன்பாலினத்தவர்கள் உலகம் முழுவதிலும் அதிகரித்து வருகிறார்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை குறித்தும் முடிவு செய்வது அந்த தனி மனிதனின் முடிவாகும். அதனை கேள்வி கேட்பதில் யாருக்கும் உரிமையில்லை.
அதன் காரணமாகவே பல மேலை நாடுகள் இது போன்ற திருமணங்களை ஆதரித்து அதிகாரபூர்வ அங்கீகாரத்தை அளித்துள்ளன. அந்த வரிசையில் தான் தற்போது தாய்லாந்து நாட்டிலும் இவ்வகை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
முதல் நாடு
இதற்கான சட்டவரைவு அந்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகில் இது வரை மொத்தமாக 37 நாடுகள் அதிகாரபூர்வமாக இவ்வை திருமணங்களை அங்கீகரித்துள்ளன.
ஆசியாவில் முதல் நாடாக தைவான் 2019-இல் அங்கீகாரம் வழங்கியது. பல தசாப்தங்களாக, தாய்லாந்து LGBT சுற்றுலாப் பயணிகளுக்கும் பாலினத்தை உறுதிப்படுத்தும் சுகாதாரப் பாதுகாப்பை விரும்பும் திருநங்கைகளுக்கும் ஒரு இடமாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.