தன்பாலின திருமணம்..நீண்ட நாள் தோழியை மணந்து கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை !!
நீண்ட நாளாக காதலித்து வந்த தனது காதலியை இங்கிலாந்து அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
திருமணம்
இங்கிலாந்து மகளிர் ஆல்-ரவுண்டர் டேனியல் வியாட் தனது விளையாட்டு முகவரான ஜோர்ஜி ஹாட்ஜை செல்சியா ஓல்ட் டவுன் ஹாலில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டார். தென்னாப்பிரிக்காவில் நிச்சயதார்த்தம் முதல் அழகான திருமணம் வரை இந்த ஜோடியின் பயணம் உலகம் முழுவதும் இதயங்களைக் கவர்ந்துள்ளது.
மார்ச் 2023 இல், டேனியல் வியாட் தனது நீண்டகால காதலியான ஜார்ஜி ஹாட்ஜுடன் நிச்சயதார்த்தத்தை அறிவித்தார்.
தென்னாப்பிரிக்காவின் இந்த நிகழ்வு நடைபெற்றது. கால்பந்தாட்ட வீரர்களின் வாழ்க்கையின் வளர்ச்சிக்காக இயங்கும் நிறுவனமான CAA Base தலைவரான ஜார்ஜி, வியாட்டின் Proposal'ஐ அப்போதே ஏற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வியாட் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.அவர்களது திருமணச் செய்தி கிரிக்கெட் உலகை சேர்ந்த பல வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
டேனி வியாட்
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷஃபாலி வர்மா மற்றும் சுஷ்மா வர்மா, இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் வீரர் ஆலி ராபின்சன் மற்றும் வியாட்டின் UP வாரியர்ஸ் அணி வீரர் சாமரி அதபத்து தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.
டேனி வியாட் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து பெண்கள் அணிக்காக திரும்பினார். கடைசி டி20யில் அவர் 48 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து தனது அணிக்கு 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தந்தார்.