புதிதாக கேசினோ திறக்கும் நாடு - இந்தியர்களை ஈர்க்க முடிவு!
கேசினோ திறக்க தாய்லாந்து முடிவு செய்துள்ளது.
கேசினோ
2024 முதல் ஆறு மாதங்களில் 17.5 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்கு வந்ததாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 35 சதவீதம் அதிகம். தாய்லாந்தில் தற்போது கேசினோக்கள் சட்டவிரோதமாகும். அரசு நடத்தும் குதிரை பந்தயங்கள், லாட்டரிகளில்தான் சூதாட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேசினோ சூதாட்ட விடுதிகளை சட்டப்பூர்வமாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டை பெரிய சுற்றுலா தளமாக மாற்றி கோடிக்கணக்கில் அந்நிய முதலீட்டை கவர்வதற்கும் வரிகளைக் குவிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள்
இதுகுறித்த மக்கள் கருத்துகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை சேகரிக்கப்படுகிறது. தொடர்ந்து, ஹோட்டல்கள், கன்வென்ஷன் சென்டர்கள், அம்யூஸ்மென்ட் பார்க்குகள் போன்றவற்றில் கேசினோக்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கேலக்ஸி என்டர்டெயின்மென்ட் குரூப் லிமிடெட், எம்ஜிஎம் ரிசார்ட்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் அங்கு கேசினோக்களை திறக்க ஆர்வம் காட்டியுள்ளன.
கேசினோ மார்க்கெட் தாய்லாந்தில் ஏகப்பட்ட சுற்றுலா பயணிகளை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்குவது குறித்த ஆலோசனையின்போது பௌத்த நாடான தாய்லாந்தில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.