அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு அறிவு இருக்காது - அமைச்சர் தா.மோ அன்பரசன்
அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு அறிவு இருக்காது என அமைச்சர் தா.மோ அன்பரசன் பேசியுள்ளார்.
தா.மோ அன்பரசன்
சென்னை அயப்பன்தாங்கலில் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழா மேடையில் பேசிய அமைச்சர், நமது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் அதில் எனக்கு மகிழ்ச்சி தான். சீமான் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதாக கூறுவார்கள். அவர்களை ரசிக்கலாம். ஆனால் அரசியலில் அவர்களால் ஜெயிக்க முடியாது. நடிகர்களை ரசிப்பதோடு நிறுத்தி விட வேண்டும். நடிகர்களுக்கு அறிவு இருக்குமா என்றால் இருக்காது. ஆட்சி நடத்துவது, கட்சி நடத்துவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமா?
ஜெயலலிதா
தமிழ்நாட்டில் திமுக இல்லாத ஒரு சந்து கூட கிடையாது. சின்ன சந்து இருந்தால் கூட அதில் இரண்டு குடும்பங்கள் திமுகவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகள் திமுக எதிர்க்கட்சியாக தான் இருந்தது. இவ்வளவு பெரிய கட்சிக்கே இந்த நிலைமை இருக்கின்ற போதில், தற்போது தனக்கு கூட்டம் கூடுகிறது என்று நினைத்து சில நடிகர்கள் முதலமைச்சராகி விட நினைக்கிறார்கள்.
நடிகர்கள் அரசியலுக்கு வந்து வெற்றிபெறுவது முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது. இனிமேல் நடிகர்கள் அரசியலுக்கு வந்து வெற்றி முடியாது. நடிகர்களின் கனவுகளை பொய்யாக்க வேண்டும் என்றால், யாருடைய தயவும் இல்லாமல் வெற்றிபெற நாம் அமைப்பு ரீதியாக பலமாக வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால் யார் தயவும் நமக்கு தேவையில்லை என பேசியுள்ளார்.