விஜய் அரசியலுக்கு வருவதை இந்த ஒரே காரணத்திற்காக வரவேற்கிறேன் - அண்ணாமலை
விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். .
அண்ணாமலை
ஈரோட்டில் நடைபெற்ற வருங்கால தலைமுறையினர் தொழில் முனைவோர் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தில் திமுகவோ, அதிமுகவோ கூட்டணி ஆட்சி அமைப்போம் என கூறினால் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை மாறும். திமுக கூட்டணி ஆட்சி அமைப்போம் என கூறப்போவதில்லை. அதிமுக முடிவு பற்றி எனக்கு தெரியாது.
விஜய்
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக நான்கு முனை போட்டி நிலவும். இது வரை முனை போட்டி நிலவி வந்தது. அவ்வபோது 3 முறை போட்டி நிலவும். ஆனால் 3 வது அணி சில காலங்களில் காணாமல் ஆகி விடும்.
4 முனை போட்டி என்பது திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் நடிகர் விஜய். போட்டி அதிகமானால் தான் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உருவாகும். 2026 தேர்தலில் மக்கள் காட்சிகளை பார்க்காமல் வேட்ப்பாளர்களை பார்த்து வாக்களிப்பார்கள்.
இந்த ஒரு காரணத்திற்காகவே விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு எந்த வாய்ப்பில்லை. சீமான் வலிமை பெறுவதையும் விரும்புகிறோம். 2026 ல் தமிழக அரசியல் அடியோடு மாறப்போகிறது என பேசியுள்ளார்.