தியேட்டர் வாயில்களில் நோ ரிவ்யூ?தயாரிப்பாளர் சங்கம் அதிரடி -கலக்கத்தில் யூடியூப் சேனல்கள்!
திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் தனிமனித தாக்குதலுக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Public Review
திரைப்படம் எப்படி இருக்கிறது என்று கூறுவதாக நினைத்து தனிப்பட்ட வன்மத்தை கக்குகின்றனர் ஒரு திரைப்படத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை அனைவரின் கருத்தாக மக்களிடம் கொண்டு செல்வது தவிர்க்கப்பட்ட வேண்டும் .
விமர்சகர்களுக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் காரணமாக ஒரு திரைப்படத்தை பற்றிய வெறுப்பை ஊடங்களில் விதைக்க கூடாது.அண்மையில் கங்குவா திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் பெரியவர் ஒருவர் வன்மத்தை கக்கினார்.
திரையரங்க வாயில்களில் யூடியூப் சேனல்கள் ரசிகர்களிடம் பேட்டி எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். தனிப்பட்ட வன்மத்தில் திரைப்படங்களை விமர்சிக்கும் விமர்சகர்கள், ரசிகர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்டனம்
மேலும் அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channelகளும் எடுக்க தடை விதிக்க வேண்டும்.
இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்.” என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.