நாங்கள் சந்தர்ப்பவாதிகள்.. நிதின் கட்கரியின் பரபரப்பு பேச்சு- புகைச்சலில் பாஜக!
நாங்கள் வலதுசாரிகளும் இல்லை .இடதுசாரிகளும் அல்ல, நாங்கள் சந்தர்ப்பவாதிகள் என்று நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார்.
நிதின் கட்கரி
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள எம்.ஐ.டி.,பல்கலைக்கழகத்தில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் ,''இலக்கியவாதிகள், கவிஞர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகவும், வலுவாகவும் தெரிவிக்க வேண்டும்.தீண்டாமை, சமூக தாழ்வு மற்றும் மேன்மை பற்றிய கருத்துகள் நீடிக்கும் வரை தேசத்தைக் ஒன்றிணைக்கும் பணி முழுமையடைந்ததாகக் கூற முடியாது.
மதமாற்ற திருமணம் செய்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை, ₨1 லட்சம் அபராதம் : பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு
ஆட்சியாளர்கள், தங்களுக்கு எதிராக தெரிவிக்கப்படும் மிக மோசமான கருத்துக்களைக் கூறும்போது அதனைச் சகித்துக் கொள்வதும்,சுய பரிசோதனை செய்து கொள்வதும் தான் முக்கியம்.இதுவே அதுதான் ஜனநாயகம்'' என்று கூறினார்.
சந்தர்ப்பவாதி
தொடர்ந்து பேசியவர்,' . நம் நாட்டில் கருத்து வேறுபாடுகளால் பிரச்னை இல்லை என்றும் கருத்துக்களே இல்லை என்பதுதான் எங்கள் பிரச்சினையாக உள்ளது. நாங்கள் வலதுசாரிகளும் இல்லை இடதுசாரிகளும் அல்ல, நாங்கள் சந்தர்ப்பவாதிகள் என்று நிதின் கட்கரி கூறினார்.
முன்னதாக அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது.ஆவணங்கள் வேகமாக நகர்கின்றன. என்னை ஒரு அரசியல் தலைவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க விரும்பினார். அந்த வாய்ப்பை ஏற்க நான் மறுத்துவிட்டேன்' என நிதின் கட்கரி கூறியது அரசியல் களத்தில் கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.