சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம் - வெளியான முக்கிய அறிக்கை!
சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீதாராம் யெச்சூரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. 2015-ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாகப் பதவியில் உள்ளார். சமீபத்தில் இவர் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
உடல்நிலை மோசம்
தொடர்ந்து, நிமோனியா காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் உடல்நிலை மோசமடையவே, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், இதுதொடர்பாக சிபிஎம் கட்சி சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “யெச்சூரி சுவாசக் குழாய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகிறார்.
பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு அவரது உடல் நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.