நடப்பது மட்டுமே வேலை; ஒரு நாளுக்கு ரூ28,000 சம்பளம் வழங்கும் டெஸ்லா - ஏன் தெரியுமா?

Elon Musk Tesla
By Karthikraja Aug 20, 2024 11:15 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடப்பதற்கு ரூ28,000 சம்பளம் வழங்க உள்ளதாக டெஸ்லா அறிவித்துள்ளது.

டெஸ்லா

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் (TESLA) சிஇஓ ஆக உள்ளார். இந்த நிறுவனம் தற்போது வேலைக்கு ஆள் எடுப்பதாக அறிவித்துள்ளது. 

tesla walking job apply

தினமும் 7 மணிநேரம் நடப்பதுதான் அந்த வேலை. அந்த வேளைக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 28,000 ரூபாய் வழங்குவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு 5'7 அடி முதல் 5’11 அடி வரை உயரம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். 

BSNL உடன் கைகோர்க்கும் எலான் மஸ்க் - கலக்கத்தில் ஜியோ ஏர்டெல்

BSNL உடன் கைகோர்க்கும் எலான் மஸ்க் - கலக்கத்தில் ஜியோ ஏர்டெல்

ஹியூமனாய்ட் ரோபோ

வாகனங்கள் தயாரிப்பதைத் தவிர்த்து,  மனிதனைப் போன்ற ஹியூமனாய்ட் ஆப்டிமஸ் ரோபோக்களையும் தயாரிக்கும் முயற்சியில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ஈடுபட்டு வருகிறது. அந்த ரோபோக்களை, மனிதர்கள் செய்யும் விஷயங்களைச் செய்யப் பழக்குவதற்கே இந்த வேலை. 

tesla walking job apply

இதன்படி அசைவுகளைப் பிரதியெடுக்கும் மோஷன் கேப்ச்யூர் சூட் உடையையும் VR ஹெட் செட்டையும் அணிந்து கொண்டு நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடக்க வேண்டும். அப்படி நடக்கும்போது அந்த அசைவுகளை ரோபோவுக்கு கற்றுத் தர முடியும். கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் அமைந்துள்ள டெஸ்லா நிறுவன தலைமையகத்தில் இந்த வேலைக்கு விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது.