கிறிஸ்துவ ஆலயத்தில் நுழைந்து கத்திக்குத்து ; பாதிரியார் மீது பயங்கரவாத தாக்குதல் !

Australia Sydney
By Swetha Apr 16, 2024 10:35 AM GMT
Report

கிறிஸ்துவ ஆலயத்தில் நுழைந்து பயங்கரவாத கும்பல் பாதிரியார் மீது கத்திக்குத்து நடத்தியுள்ளது.

கிறிஸ்துவ ஆலயம்

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்டு என்ற பெயரில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. அங்கு பாதிரியார் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தபோது திடீரென சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அவரை நோக்கி வந்தார். அப்போது அவர் பாதிரியாரின் நெஞ்சில் கத்தியால் குத்தினார்.

கிறிஸ்துவ ஆலயத்தில் நுழைந்து கத்திக்குத்து ; பாதிரியார் மீது பயங்கரவாத தாக்குதல் ! | Terrorist Stabbing Of Priest At Christian Church

இதனால் அவர் சம்பவ இடத்திலே சரிந்து விழுந்து விட்டார். இதனை பார்த்து ஆலயத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆலயத்தின் அவையில் உள்ள பெண்கள், முதியவர்கள் என எல்லோரும் பயந்து அலறினர். அங்குள்ள ஒரு சிலர் தாக்குதலை தடுத்து நிறுத்தவும் முயன்றனர்.

ராணுவ தளத்தை குறிவைத்து தாக்கிய தீவிரவாதிகள் - 54 வீரர்கள் உயிரிழப்பு!

ராணுவ தளத்தை குறிவைத்து தாக்கிய தீவிரவாதிகள் - 54 வீரர்கள் உயிரிழப்பு!

பயங்கரவாத தாக்குதல்

இந்த தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் மக்கள் அந்நபரை பிடித்து வைத்திருந்தனர். அந்த நபரை போலீசார் விசாரித்தபோது , 16 வயது சிறுவன் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளான் என தெரியவந்துள்ளது.

கிறிஸ்துவ ஆலயத்தில் நுழைந்து கத்திக்குத்து ; பாதிரியார் மீது பயங்கரவாத தாக்குதல் ! | Terrorist Stabbing Of Priest At Christian Church

மேலும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என நம்பப்படுகிறது என்று நியூ சவுத் வேல்ஸ் காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன் சிட்னி நகரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சுழலில் தற்போது இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடந்து நேரலையாக ஒளிபரப்பாகியுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.