ராணுவ தளத்தை குறிவைத்து தாக்கிய தீவிரவாதிகள் - 54 வீரர்கள் உயிரிழப்பு!

Government of Uganda Somalia
By Vinothini Jun 04, 2023 07:10 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

தீவிரவாதிகள் ராணுவ தளத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தியதில் 54 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதிகள்

சோமாலியா நாட்டில், அரசுக்கு எதிராக அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அதனால் அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் உகாண்டா நாட்டை சேர்ந்த அமைதி படையும் சோமாலியாவில் தீவிர வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

terrorist-attack-on-military-54-soldiers-died

இதனிடையே, சோமாலியா தலைநகரான மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள புலமாரரில் உள்ள பாதுகாப்பு படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

தொடர்ந்து, ராணுவத்தினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 54 உகாண்டா வீரர்கள் பலியாகியுள்ளனர்.

உகாண்டா அதிபர்

இதனை தொடர்ந்து, உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி பேசுகையில், "சோமாலியாவில் உள்ள ராணுவ தளத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 54 உகாண்டா அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

terrorist-attack-on-military-54-soldiers-died

எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றனர்.

இதற்கிடையே ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தியதாகவும், 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது" என்று கூறினார்.