ஒரு பக்கம் மோடி பதவியேற்பு..மறுபக்கம் மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் - பறிபோன உயிர்கள்!
பக்தர்கள் சென்ற பேருந்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
தற்போது நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
பறிபோன உயிர்கள்
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மன்வலில் இருந்து குஜ்ரு நக்ரோடாவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ரேசி என்ற பகுதியில் சென்று கொண்டு இருந்த பேருந்து ஒன்றில் ஏராளமான பக்தர்கள் பயணித்துள்ளனர். அதை நோக்கி அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர்.அந்த பேருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு ஷிவ்கோடி குகைக் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த நிலையில்,
இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தோரை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தகவலறிந்து உடனே ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளன. இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், விடீயோக்கள் வெளியாகியுள்ளது.