பிரியாணி ஏன் சூடா இல்ல..? உருட்டுக்கட்டையால் அடிதடி - பழமை வாய்ந்த ஹோட்டலில் பரபரப்பு!
ஹோட்டல் ஒன்றில் அடிதடியில் ஈடுபட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தகராறு
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பழைமை வாய்ந்த 'கிராண்ட்' ஹோட்டல் உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு அங்கு சாப்பிட வந்த ஒரு கும்பலுக்கு பிரியாணி பரிமாறப்பட்டது.
அப்போது பிரியாணி சூடாகவும், ருசியாகவும் இல்லை என ஒருவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஹோட்டல் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
அப்போது ஊழியர்கள் உருட்டுக்கட்டைகள் மற்றும் சேர்களை எடுத்து வாடிக்கையாளர்களை தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஹோட்டலில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.
வழக்கு பதிவு
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
மேலும், ஹோட்டல் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில் "பிரியாணி சூடாக இல்லை என்ற காரணத்தால் இந்த பிரச்சனை நடந்துள்ளது. முதலில் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். திடீரென வாடிக்கையாளர் ஹோட்டல் ஊழியரை தாக்கியதால் நிலைமை மோசமாகியுள்ளது.
இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். இந்த விவகாரம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.